ஆப்நகரம்

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

வேன் தலைகுப்புற கவிழ்ந்து நேர்ந்த விபத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

Samayam Tamil 23 Feb 2020, 11:06 pm
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்த பெற்ற கோயிலுக்கு, தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
Samayam Tamil தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... மயிரிழையில் உயிர் தப்பிய 20 பேர்


ராமநாதபுரம் அருகே மாடகோடன் என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்து கொண்டிருந்த ஆம்னி வேனின் பின் டயர் வெடித்ததால், வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களை மீட்ட காவல் துறையினர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவிநாசி சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்புக்கு என்ன காரணம்..?

மேலும், இந்த விபத்து குறித்து கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் என இருபது்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில்,லேசான காயங்கள் அடைந்தவர்களுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி