ஆப்நகரம்

கண்டெயினர் லாரி கடத்தல்: ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெயினர் லாரியில் கொண்டு சென்ற ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2020, 5:29 pm
சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து செல்போன்கள் கண்டெயினர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக அந்த கண்டெயினர் லாரியானது சென்ற போது, ஒசூர் அருகே மேல்மலை என்ற இடத்தில்தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரியின் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு அதிலிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்பில் நகைகள் கொள்ளை; சென்னை தி.நகரில் பரபரப்பு!

சென்னையில் இருந்து செல்போன்களை ஏற்றிக் கொண்டு மும்பை சென்ற கண்டெயினர் லாரியை கடத்தி செல்போன்களை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி