ஆப்நகரம்

எம்.ஆர். விஜயபாஸ்கர் ஐடி ரெய்டு: ரூ.25 லட்சம் பறிமுதல், முக்கிய ஆவணங்கள் சிக்கின

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 17 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நிறைவு

Samayam Tamil 22 Jul 2021, 8:47 pm
அதிமுக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். முன்னதாக அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடந்துள்ளதாக ஐடி வட்டாரங்கள் மூலம் தகவல் வந்தது.
Samayam Tamil கோப்புப்படம்


சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது.

மேலும், கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் நடைபெற்று வந்த சோதனை இரவு முடிவடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் எதிர்க்கட்சியினர் தரப்பில் நடந்துள்ள இந்த முதல் ஐடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் திமுக அரசு அச்சுறுத்துவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொசுவை விரட்ட புகை மூட்டம், பெண் பலி, மூவர் கவலைக்கிடம்..! சென்னை சோகம்

மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி