ஆப்நகரம்

கூலி வேலை செய்யும் தாயை தவிக்க விட்டுச் சென்ற மாணவன்..! பூந்தமல்லியில் சோக சம்பவம்...

'முடியை ஒழுங்கா வெட்டமாடியா' என தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2020, 2:31 pm
பிள்ளையின் நன்மைக்காக தாய் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டு தனது தாயை தவிக்கவிட்டு சென்றுள்ள சம்பவம் கைகான் குப்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை


சென்னை: வளசரவாக்கம் கைகான் குப்பத்தை சேர்ந்தவர் மோகனா (37). இவர் உணவு விடுதியில் பாத்திரங்களை சுத்தபடுத்தும் வேலையை செய்து வருகிறார். இவரது மகனான சீனிவாசன் (17) குன்றத்தூரில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி சீனிவாசன் தனது வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள ஒரு சலூன் கடையில் அரைகுறை ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்த அவரை பார்த்த மோகனா அதிர்ச்சியானார். இதனால் கோபமடைந்த அவர் ' படிக்கும் வயதில் இப்படியா முடியை வெட்டுவது. ஆசிரியர்கள் உன்னை திட்டமாட்டார்களா? ஒழுங்காய் வெட்டினால் என்ன என கூறி திட்டியுள்ளார்.

600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்!

அதன் பிறகு மோகனா வேலைக்கு சென்று விட, வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு பனி முடிந்து வீட்டுக்கு வந்த மோகனா கதவை திறந்து பார்த்தபோது சீனிவாசன் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். மோகனாவின் கதறலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தினர். அதில், விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன் வீட்டுக்கு வந்த நிலையில், தாய் கடுமையாக திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என உறுதியானது. கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய் திட்டியதன் காரணமாக மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கைகான் குப்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி