ஆப்நகரம்

'ரொம்ப அடிமையாகிட்டேன்'... கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவி தற்கொலை...

திருவனந்தபுரத்தில் செல்போனுக்கு அடிமையாகி விட்டதாக கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 4:29 pm
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன். இவர் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஜீவா மோகன் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவி ஜீவா மோகன் எழுதியிருந்த மூன்று பக்க கடிதம் கிடைத்தது.
Samayam Tamil kerala school student


அதில், நான் செல்போனுக்கு அடியிமையாகி விட்டேன்... என்னால் அதில் இருந்து மீளமுடியவில்லை... எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் மாணவியின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கூறியதாவது, எனது மகள் நன்றாக படிக்க கூடியவள்...

தினமும் அவளது அறையின் கதவை சாத்திக்கொண்டுதான் படிப்பாள் ... கடந்த சனிக்கிழமை அப்படிதான் படித்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்தோம்... எனது இன்னொரு மகள் ஜீவாவை சாப்பிட வருமாறு கதவை தட்டினாள்... ஆனால், அவள் திறக்கவில்லை... பதில் குரலும் இல்லை...

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை... சினிமா பிரபலங்கள் உணர்வார்களா?

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்... இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், மாணவி செல்போனுக்கு அடிமையானதற்கான பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை... அடிக்கடி யூ டியூபில் கொரியன் பாடகர்களின் நிகழ்ச்சியை பார்த்ததாக தெரிகிறது... சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லை.... இருப்பினும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடபு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி