ஆப்நகரம்

கர்ப்பிணி பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்... போலீஸ் உடந்தை... ஜோடியை தேடும் ஆண், பெண்..!

கர்ப்பிணி பெண்ணை வேறு ஒரு நபருடன் சேர்த்து வைத்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

Samayam Tamil 23 Jun 2022, 7:28 pm
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. தனியார் வங்கி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஞானதீபம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக அந்தோணி முத்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று தனது கர்ப்பிணி மனைவி ஞான தீபத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்
Samayam Tamil ஞானதீபம் மற்றும் காதலன் பிரதீப்
ஞானதீபம் மற்றும் காதலன் பிரதீப்

அந்தோனிமுத்து மற்றும் ஐஸ்வர்யா (வெவ்வேறு குடும்பம்)


இதனை அடுத்து, கடந்த 19ஆம் தேதி அந்தோனிமுத்துவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், ஞானதீபம் அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரதீப் என்ற வாலிபருடன் காவல்நிலையம் வந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரதீப் மனைவி ஐஸ்வர்யா

இதையடுத்து அந்தோணி முத்து தனது குடும்பத்தாருடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உனது மனைவி கர்ப்பத்துக்கு காரணம் பிரதீப் தான் எனவே ஞானதீபம் மேஜர் என்பதால் அவருடன் செல்ல விரும்புகிறார் எனவே அவரை அவருடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி ஞானதீபம் மற்றும் பிரதீப்பை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தோணி முத்து

இதையடுத்து அந்தோணி முத்துவின் தந்தை மற்றும் அந்தோனிமுத்து தனது மனைவியிடம் பேச முற்பட்டபோது அந்தோணி முத்துவை காவல் ஆய்வாளர் பேச அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. அந்தோணி முத்துவின் தந்தையை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.‌

ஞானதீபம்

இதையடுத்து அந்தோணி முத்து மற்றும் அந்தோணி முத்துவின் மனைவியை கூட்டி சென்ற பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது தனது மனைவியை வேறொரு நபருடன் சேர்த்து வைத்து அனுப்பிய காவல் ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அந்தோனிமுத்து கூறினார். பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை மீட்டு மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி