ஆப்நகரம்

உடுமலை காட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த இலங்கை அகதி கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த ஜெயராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Samayam Tamil 1 Jun 2019, 3:28 pm
உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த ஜெயராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Samayam Tamil arrest


தேன் மற்றும் தைல புல்களை எடுக்க அத்துமீறி வனப்பகுதியில் தங்கியிருந்த ஜெயராஜை வனபகுதியில் வைத்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இங்கு சந்தனமரம் உள்ளிட்ட அரியவகை மரங்கள் மற்றும் விலங்குகள் வசித்துவருகின்றன.

இந்நிலையில் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக மர்ம நபர் சட்டவிரோதமாக நுழைந்து திருமூர்த்திமலை, குருமலை, குழிப்பட்டி போன்ற வனப்பகுதியில் தேன் மற்றும் தைலபுல்களை எடுத்து வந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

கடந்த இரண்டு நாட்களாக குழிப்பட்டி மழைவாழ் கிராமத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வனச்சரகர் தனபாலன் அறிவுறுத்தலின் பெயரில் வனக்காப்பாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சென்று அந்து தங்கியிருந்த நபரைகைது செய்து வந்தனர்.

விசாரணையில் அவர் பெயர் ஜெயராஜ் என்பதும் திருமூர்த்தி நகரில் உள்ள இலங்கை அகதி முகாமை சார்ந்தவர் என்பவது தெரியவந்தது. பின்னர் ஜெயராஜை உடுமலைப்பேட்டை கிளைச்சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

அடுத்த செய்தி