ஆப்நகரம்

வெளியே வருபவர்களின் கவனத்திற்கு..! தமிழ்நாட்டில் இத்தனை பேர் மீது வழக்கு...

ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்க்ள மீது தமிழக காவல்துறை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2020, 2:48 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு 144 தடை (ஊரடங்கு உத்தரவு) அமலாகியுள்ளது. ஆனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காரணமின்றி பலர் வெளியில் வந்து செல்கின்றனர். இதனால் அத்தியாவசிய காரணகளுக்காக வெளியில் வரும் மக்களும் பாதிக்கப்படும் சூழல் நிலவியுள்ளது.
Samayam Tamil தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்க்ள மீது வழக்கு


இந்த 21 நாட்களில் வானங்களில் வெளியில் வருபவர்கள் சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்திருந்தும், போலீசாரின் சோதனையில் வாகன ஓட்டிகள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதும், பொய் காரணங்களை கூறி தப்பிக்க முற்படுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பொறுமையை இழக்கும் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்டுக்கள் நடவடிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், உத்தரவை மீறிய 1252 நபர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா குறித்து பொய் வதந்தியை பரப்பிய குற்றத்திற்கு 16 நபர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அதேபோல தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறை மீறியதால் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல் பங்குகள் இனி 5 மணி நேரம்தான் இயங்கும்?

இதுகுறித்தான பத்திரிக்கை செய்தியில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு மக்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுதல்காக போன்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 144 தடை உத்தரவை மீறி செயல்பட நபர்கள்மீது கீழ்கண்ட வகையில் தமிழகம் முழுவதும் வழக்கு பதிவுசெய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பில் இருப்போம் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி