ஆப்நகரம்

'என்ன ஹெல்மெட் போட சொல்றது தப்பு'.. அறிவுரை வழங்கியவரை மிரட்டிய போலீஸ்..!

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய காவலருக்கு அறிவுரை வழங்கிய சமூக ஆர்வலரை ஒருமையில் பேசி மிரட்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனங்கள் வலுத்துள்ளன.

Samayam Tamil 7 Oct 2022, 1:11 pm
இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. மேலும், இரு வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் அந்த விதி இருந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதே உத்தரவை சென்னை போக்குவரத்து காவல்துறை மீண்டும் பிறப்பித்தது. இந்நிலையில், வாகன ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகள் மற்றும் பின்சென்று செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Samayam Tamil chennai police


அதன்படி, சென்னை நகருக்குள் தினமும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விதியானது பொதுமக்கள் மட்டுமல்லாமல் போலீசாருக்கும் உள்ளது. ஆனால், போலீசாரே பல நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் சீருடையில் பந்தாவாக வாகனம் ஓட்டி சென்று சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் தணிக்கையில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் கண்டிக்கின்றனர்.


அபராதம் போட முடியாததால் சில நேரங்களில் லஞ்சம் வாங்கிக்கொண்டு வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிவிடுகிறார்கள் என்றும் குற்றசாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் போடுமாறு அக்கறையுடன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அந்த வாகன ஓட்டியை வழிமறித்து ஒருமையில் பேசி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரவுடிகளுடன் ரொம்ப 'நெருக்கம்'.. அள்ளு கிளப்பும் காஞ்சிபுரம் லோகேஸ்வரியின் கதை..!

சமூக அக்கறையுடன் அறிவுறுத்திய நபரை மிரட்டியது மட்டுமல்லாமல், '' ஹெல்மெட் அணிவது என் பிரச்சினை, உனக்கு என்னடா'' என்று கேள்வி கேட்கும் அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்றும் அனைத்து காவலர்களும் ஹெல்மெட் அணிவதில் அலட்சியம் காட்டகூடாது என்று உத்தரவிடுமாறும் தமிழக டிஜிபிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி