ஆப்நகரம்

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...

ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...

Samayam Tamil 18 Nov 2019, 12:42 pm
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.
Samayam Tamil lower-criminal-liability-age


தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.

காசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...

இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.

அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.


கவரிங் நகைக்கும் தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி திருடர்கள்..!

அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி