ஆப்நகரம்

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு: 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

தேனாம்பேட்டையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் நான்கு பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Samayam Tamil 5 Mar 2020, 7:01 pm
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த 3ம் தேதி சென்னை காமராஜர் அரங்கம் அருகே பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச்சென்ற வழக்கில் இன்று கமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
Samayam Tamil தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்


முன்னதாக சம்பவம் நடந்த அன்று விசாரணையில் இறங்கிய போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு பணியை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வெடிகுண்டு வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது.


இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில், வெடிகுண்டுகளை வீசியது தி.நகர் ராஜாபிள்ளை தோட்டத்தை சேர்ந்த மகேஷ் (20) மற்றும் அவருடைய நண்பர் இருவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

யாருக்கு போட்ட ஸ்கெட்ச்?- அண்ணா சாலை குண்டுவெடிப்பின் அதிரவைக்கும் பின்னணி!

போலீசார் அவர்களுடன் நடத்திய விசாரணையில், தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி.மணி, காக்காத்தோப்பு பாலாஜி ஆகிய இருவருக்கும்தான் வெடிகுண்டு ஸ்கெட்ச் போடப்பட்டது தெரிந்தது. ஆனால் அந்த திட்டத்திலிருந்து அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து போலீசார் சிக்கிய இரண்டு வாலிபர்களை வைத்து தலைமறைவாகியுள்ள மற்றவர்களையும் பிடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி