ஆப்நகரம்

கற்களை வெளியே எடுத்து செல்ல தடையிருந்தும் விதிமீறல் - நெல்லை குவாரி விபத்தில் பகீர்

நெல்லையில் விபத்து நடந்த குவாரியில் நடைபெற்றுள்ள விதிமீறல்கள் குறித்து உதவி இயக்குனர் தலைமையிலான நில அளவை துறையினர் ஆய்வு. மேற்கொண்டனர்.

Samayam Tamil 19 May 2022, 4:15 pm
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள குவாரியில் கடந்த 14- ந்தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு கீழே விழுந்ததில் குவாரிக்குள் 6 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3-வது நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மேலும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்
Samayam Tamil நெல்லை குவாரி விபத்து


இந்த நிலையில், 6வது நபரான லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் உடலை மீட்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 5வது நாளான மீட்பு பணியில் அவரது உடல் இருக்கும் இடம் அடையாளம் காணும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி குவாரி செயல்பட்டு வருவதை கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் உறுதி செய்தார்.

குவாரியில் இருந்து கற்களை வெளியே எடுத்துச் செல்வதற்கான நடை சீட்டு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் குவாரியின் குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடை சீட்டு அனுமதியின்றி கற்கள் எடுத்து விற்கப்பட்டது தொடர்பாகவும் போலி அனுமதி சீட்டுகள் அடித்து கற்கள் எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை தீவீர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கே.ஜி.எப் திரைப்படம் போல் காவல் நிலையம் தகர்க்கப்படும் - திருச்சியில் எச்சரிக்கை

இதனிடையே நில அளவை துறை சார்பில் குவாரியை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. நில அளவை உதவி இயக்குனர் வாசுதேவன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் குவாரி அமைந்துள்ள 6 ஏக்கர் இடத்தில் எவ்வளவு ஆழத்திற்கு கற்கள் எடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு க்யூபிக் மீட்டர் கற்கள் எடுக்கப்பட்டு உள்ளது? அனுமதிக்கப்பட்ட அளவை விட இவை அதிகம் எத்தனை சதவீதம் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பது குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் அளிக்கப்படும் என அளவை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி