ஆப்நகரம்

குழந்தை ஆணா பெண்ணா? கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து பார்த்த கணவன்!

உபி அருகே பெண் குழந்தைக்கு பிறக்கும் என்று பூசாரி சொல்லிவிட்டதால் மனைவியின் வயிற்றை கிழித்து பார்த்த கொலைகார கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 4:13 pm
உத்தரப் பிரதேச மாநிலம் புதுவான் மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னாலால் (45). இவருக்கு திருமணமாகி 5 மகள்கள் உள்ள நிலையில் அவரது மனைவி 6 வது முறையாக கருத்தரித்து நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், இந்த முறையாவது ஆண் குழ்ந்தை பிறக்க வேண்டும் ஏற்று ஆவலாக இருந்து வந்த பன்னாலால், மனைவியை அழைத்துக்கொண்டு கிராம பூசாரியிடம் சென்றுள்ளார்.
Samayam Tamil woman at hospital


அவர். இந்த முறையும் பெண் குழந்தைதான் என்று குறி சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் விரக்தி அடைந்த பன்னாலால், கருவை கலைத்திடுமாறு மனைவியிடம் விவாதித்துள்ளார். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பன்னாலால் சம்பவத்தன்று மனைவியை அடித்து தாக்கியுள்ளார்.

இதில் கடும் சோர்வடைந்த மனைவி தரையில் மயங்கிய போது, அவரது வயிற்றை அறுத்து, குழந்தை ஆணா பெண்ணா என்று பார்க்க முயற்சித்துள்ளார். இதையடுத்து வயிற்று அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை கண்ட அவரது சகோதரன் உடனே அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

வாலிபர் கொலை: தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஆனால், அங்கு ஆப்ரேஷன் செய்வதற்கு உடனே 4 லட்சத்தை காட்டுமாறு கேட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து பைரேலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உடனடியாக சிகிச்சை செய்துள்ளனர். வயிற்றில் உள்ள குழந்தை நலமாக இருப்பதாக கூறும் மருத்துவர்கள், வயிற்றின் மேல் பகுதி மட்டுமே அறுக்கப்பட்டதால், கருவில் உள்ள குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை. ஆனால், கர்ப்பிணியின் உடலில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தனர். இந்நிலையில், பன்னாலாலை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஒரு ஆண் உருவாக வேண்டும் என்றாலும் அதற்கு பெண்ணே காரணமாவாள். 5 பெண் குழந்தைகளை வளர்க்கவே முடியாது என்றால் 6 வது குழந்தைக்கு முயற்சி செய்திருக்கக்கூடாது என்றும், வேண்டாம் என்றால் எத்தனையோ ஆதரவு தரும் இல்லங்களும், தம்பதிகளும் உள்ளார்கள் என்பதை மறக்கவேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி