ஆப்நகரம்

நோயாளியாக மாறி எஸ்கேப் ஆன ரேப்பிஸ்ட்..! சென்னை போலீசாருக்கு அதிர்ச்சி

டி.பி.சத்திரம் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளியை கையில் சிக்கியும் போலீசார் கோட்டை விட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2020, 8:05 pm
சேத்துப்பட்டு, ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(29). நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆயுதங்களால் வெட்டப்பட்டது போல காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகமடைந்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil chennai rapist


உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைந்தகரை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்ட போது தனது பெயர் கணேசன் எனவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாரை பார்பதற்காக சென்னை வந்ததாகவும் லிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சா வாங்குவதற்காக செனாய் நகர், பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள காலி மைதானம் அருகே நண்பர் ஒருவருடன் சென்றபோது அங்கு மறைந்திருந்த பிரபல பெண் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் பேரன் உஸ் என்கிற சந்திரசேகரன்(26) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொண்டு தன்னை கத்தியால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்பு அங்கிருந்து தப்பி சேத்துப்பட்டில் உள்ள வீட்டிற்கு சென்றதாகவும், தனது சகோதரி உஷாவின் உதவியோடு மருத்துவமனையில் சேர்ந்ததாததவும் தெரிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், செனாய் நகர், பகவதி அம்மன் கோவில் காலி மைதானம் அருகே விசாரணை மேற்கொண்ட போது, லிங்கம் கஞ்சா புகைக்க சென்றபோது அங்கு மறைந்திருந்த உஸ் என்கிற சந்திரசேகரன்(26), நிலேஷ் குமார்(22), விஷ்வா(என்ற) விசுவாசம்(19), பிரகாஷ் என்கிற பாபா(19), ஆகியோர் லிங்கத்தை கத்தியால் வெட்டியது தெரியவந்தது.

vஐயோ போயிட்டிங்களே... ஓவர் ஆக்டிங்கில் சிக்கிய சதிகார மனைவி..! கோவை சம்பவம்

மேலும், இந்தப் பகுதியில் லிங்கம் குழுவினருக்கும் சந்திர சேகரன் குழுவினருக்கும் இடையே ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்பதிலும் கஞ்சா விற்பதிலும் மோதல் இருந்துள்ளது. இதன் காரணமாக லிங்கத்தை எதிர் தரப்பினர் தீர்த்து கட்ட முடிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்திரசேகர், விஷ்வா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் தான் டி.பி.சத்திரம் மாற்றுத்திறனாளி பெண்ணை தாயின் கண்ணெதிரே கத்திமுனையில் நண்பர்களோடு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி லிங்கம் என்கிற தகவலை கண்டறிந்த காவல்துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் அங்கிருந்து தப்பியோடிய லிங்கம் மீண்டும் தலைமறைவாகிவிட்டார். நீண்ட நாட்களாக வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி பெயரை மாற்றி கூறி தப்பி சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் எங்கும் தப்பிவிட முடியாது என நம்பிக்கை தெரிவிக்கும் காவல்துறையினர், தனிப்படை மூலம் லிங்கத்தை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி