ஆப்நகரம்

மனைவிக்கு பயந்து விடுப்பு விண்ணப்பம் அளித்த காவலர்..! வித்தியாச பின்குறிப்பு

மத்திய பிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின்குறிப்புடன் விடுப்பு விண்ணப்பம் அளித்த காவலர்

Samayam Tamil 11 Dec 2020, 2:34 pm
மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மேல் அதிகாரியிடம் கொடுத்துள்ள வித்தியாச விடுப்பு விண்ணப்பம் நெட்டிசன்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Samayam Tamil file pic


காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்புக்கோரி மேல் அதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல, மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலிப் குமார் அகிர்வார் என்ற காவலர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமது மைத்துனருக்கு திருமணம் நடை பெற இருப்பதால் டிசம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை விடுப்பு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதோடு விட்டு விடாமல் பின்குறிப்பு என கூறி, '' இந்த விடுப்பை எனக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் என் மனைவியிடம் நான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எழுதியுள்ளார்.


இந்தியில் எழுதப்பட்ட இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கடிதம் குறித்து கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் உபேந்திர ஜெயின் கூறுகையில், விடுப்பு கேட்டுள்ள காவலருக்கு நிச்சயம் விடுப்பு கிடைக்காது.

திருப்பத்தூரில் கணவன், பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி..!

இப்படியான காரணம் கூறி ஒரு போலீஸ் விண்ணப்பத்தை வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு விடுப்பு வழங்கப்படாது, மாறாக தண்டிக்கப்படுவர். மனைவி மீது உள்ள பயத்தினால் இப்படி பின்குறிப்புடன் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார். அவரை பற்றி விசாரித்ததில் கடந்த 11 மாதங்களில் மட்டும் திலீப் குமார் 55 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார் என கூறினார்.

அடுத்த செய்தி