ஆப்நகரம்

கேரளாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பள்ளி மாணவியை இடித்து தள்ளிய இளைஞர்

கேரளாவில் 6 முறை போக்குவரத்து வழக்கில் சிக்கியுள்ள இளைஞர் மீண்டும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பள்ளி மாணவியை இடித்து தள்ளிய சம்பவம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Feb 2023, 1:23 pm
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் பைக் ஸ்டண்ட் செய்ய முயற்சித்து வீலிங் சாகசத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil crime news


அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரமாக நடந்து கொண்டிருந்த பள்ளி மாணவி மீது மோதி அவரும் கீழே விழுந்து அடிபட்டார். இதை கண்டதும் சக மாணவிகள் ஓடி சென்று மாணவியை மீட்டனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.


விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் பெயர் நோஃபல் என்பதும் அவர் ஏற்கனவே பைக் சாகசத்தில் ஈடுபட்டு 6 முறை அபராதம் கட்டியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதாக கேரளா போக்குவரத்து துறை தெரிவித்தது. மேலும், பைக் சாகசம் செய்து பள்ளி மாணவி மீது மோதியாய் வாலிபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! மதுரையில் பரபரப்பு

பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று உலக மக்கள் காதலர் தினம் கொண்டாடி வருகின்றனர். அதே போல, இதுபோன்ற ஊதாரி இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவிகள் முன்பு பந்தா காட்டுவதாக கூறி பைக் சாகசம் செய்து முட்டியை உடைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் சிவனே என்று செல்லும் பெண்களையும் விபத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர்.

இனி இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபருக்கு போலீசார் அபராதம் விதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் முதல் சம்பவத்திலேயே ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாகவோ அல்லது 6 மாதத்துக்கோ ரத்து செய்வதை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

அடுத்த செய்தி