ஆப்நகரம்

திருப்பதியில் பெண்கள் செய்த கைவரிசை... சிசிடிவியில் அம்பலமான காட்சிகள்

திருப்பதியில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கடையில் உள்ள பொருட்களை திருடிய பெண்கள் இரண்டு பேர் சிசிடிவியை உடைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 7:54 pm
கொரோனா வைரஸ் நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் திருமலையில் ஊரடங்கு நடைபெற்று வருவதால் திருமலையில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
Samayam Tamil சிசிடிவி காட்சிகள்


இந்நிலையில் அங்குசு சுமார் 60 நாட்களாக மூடப்பட்டிருந்த கடைகளில் சில பொருட்கள் திருடு போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் திருமலையில் உள்ள கல்யாணி விடுதி பகுதியில் இருக்கும் ஒரு கடையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண் தொழிலாளர்கள் மூடப்பட்டிருந்த ஒரு கடையில் திருடுவதற்கு முயன்றனர்.

அப்போது கடையில் இருந்த சிசி டிவி கேமராவை பார்த்த ஒரு பெண் அந்த கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகுவதாக நினைத்து ஒரு சிசிடிவி கேமராவை கல்லால் அடித்து சேதம் செய்தார். அந்த கடையில் நாங்குபுறமும் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் பணிபுரிந்து வந்ததால் முழுவதுமாக திருட்டு சம்பவம் பதிவானது.

திருமணம் அன்று இரவு சிறுமி அழுகை... தாலி கட்டியவருக்கு ஷாக்..!

இதைப் பார்த்த கடையின் உரிமையாளர் இதுகுறித்து திருமலை இரண்டாவது காவல்நிலைய போலீசார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார்.

அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பதிவான காட்சிகளை பார்த்து திருட்டில் ஈடுபட்ட பெண்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி