ஆப்நகரம்

தேனி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது!

வருசநாடு அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 20 Apr 2019, 1:45 pm
வருசநாடு அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil தேனி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது!
தேனி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து வனபகுதியில், வனச்சரகர் இக்பால் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனபகுதிக்குள் சுற்றிதிரிந்த 3 பேர் சந்தேகம் படும்படியாக வனத்துறையினரை பார்த்ததும் தப்பியோடினர்.

இதையடுத்து அவர்களை விரட்டி பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் திருப்பூரை சேர்ந்த திருப்பதி, அரண்மனைபுதூரை சேர்ந்த பாண்டியராஜன், வருசநாட்டை சேர்ந்த சுரேஷ் என்பதும், மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் வனபகுதிக்குள் சுற்றிதிரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் வைத்திருந்த எஸ்பிபிஎல் ரக நாட்டுதுப்பாக்கி, பேரல் செட், கத்தி, அரிவாள், டார்ச்லைட்டுகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைதனாவர்கள் ஏற்கெனவே பல்வேறு வனவிலங்குகள் வேட்டை சம்பவங்களில் இதற்கு முன்பு ஈடுபட்டிருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி