ஆப்நகரம்

தூத்துக்குடி வெடிகுண்டு வீச்சில் பலியான ரவுடியை வீச்சருவாள் வைத்து அடக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் மீது குண்டு வீசி பலியான ரவுடி துரைமுத்து உடல் அடக்கத்தின் போது வீச்சருவாள் வைத்து அடக்கம் செய்தது குறித்து விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் பேட்டி

Samayam Tamil 21 Aug 2020, 9:38 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் ரோந்து பணி செய்வதற்காக 16 இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
Samayam Tamil supramaniyan funeral


இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.
மணக்கரையில் 4 ரவுடிகள் பதுங்கி இருப்பதை பிடிக்க சென்றபோது ரவுடிகள் வெடிகுண்டு வீசி உள்ளனர்.

வெடிகுண்டு எங்கு வைத்து தயார் செய்தார்கள் என்பது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் மீது குண்டு வீசி பலியான ரவுடி துரைமுத்துவின் உடல் அடக்கத்தின் போது வீச்சருவாள் வைத்து அடக்கம் செய்தது குறித்து விசாரணை செய்து வருகிறோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஹாக்கி பயிற்சிக்கு மகள்களை விட்டு சென்ற தந்தை...! மேலாளர் கொடுத்த அதிர்ச்சி...

தூத்துக்குடி நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விதத்தில் காவலர் சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த விவகாரத்தை அடுத்து, மாநிலம் முழுக்க உள்ள ரவுடிகளை கூண்டில் ஏற்றும் நடவடிக்கையை மாவட்ட காவல்துறையினர் சத்தமின்றி எடுத்து வருகின்றனர். இன்று காலை சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி