ஆப்நகரம்

தகாத உறவு, வீதிக்கு வந்த குடும்பம்... டிக்டாக் புகழ் லயா தர்ணா போராட்டம்..!

டிக்டாக் பிரபலம் லயா தர்மராஜ் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா

Samayam Tamil 5 Aug 2021, 6:28 pm
டிக்டாக்கில் சமூகம் சார்ந்த கருத்துக்களை பேசி உத்வேகமளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் லயா தர்மராஜ். இவர் தற்போது முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் தனது தங்கையுடன் திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பார்கள் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


லயா தர்மராஜுக்கு திவ்யா என்ற தங்கை உள்ளார். திவ்யாவுக்கும், திண்டுக்கல் மாவட்டம் சின்னையாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் எனவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், ராஜேஸ்வரன் கடந்தாண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்காக மதுரை சென்றுள்ளார். அப்போது அங்கு படித்து வந்த ஏற்கனவே திருமணமான நாகராணி என்ற பெண்ணுடன் ராஜேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமண உறவை மீறிய காதலாக மாறியுள்ளது.


இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் திவ்யாவுக்கு தெரிய வர, கணவனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், திவ்யாவிடம் ராஜேஸ்வரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ள வந்துள்ளார். இந்த நிலையில், கணவன் வட மதுரையில் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துகொன்டு தன்னை ஏமாற்றுவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும் திண்டுக்கல் அனைத்து மதுரை காவல் நிலையத்தில் திவ்யா புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரை அடுத்து ஒருநாள் கூட ராஜேஸ்வரனை அழைத்து போலீசார் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 48 மணி நேரத்தில் தனுஷ் வரி செலுத்த உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

மேலும், சமீப காலமாக ராஜேஸ்வரன் நாகராணியுடன் சேர்ந்து வசித்து வருவதாகவும் திவ்யா தெரிய படுத்தியுள்ளார். இந்த நிலையில், டிக்டாக் புகழ் லயா தனது தங்கை திவ்யாவையும், பெற்றோரையும் அழைத்து வந்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது பேசியவர், எனது தங்கையின் கணவர் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதுடன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். அவரை குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையில் இல்லை. ஆகையால், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் போலீசாரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறினார். இந்நிலையயில், லயா மற்றும் அவரது தங்கையை சமாதானப்படுத்திய போலீசார் ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

அடுத்த செய்தி