ஆப்நகரம்

அலிமா எந்த சந்தோஷத்தையும் பார்க்கல... புளியந்தோப்பு மின்கசிவில் இறந்தவரின் சோகம்

சென்னை மின்கசிவில் பலியான பெண்ணின் சோக வாழ்க்கையை அவரது சகோதரி தனது புகார் மூலம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Sep 2020, 2:47 pm
சென்னை கன்னிகாபுரத்தை அடுத்த புளியந்தோப்பைச் சேர்ந்தவர் அலிமா (35). இவர் நேற்று நாராயணசாமி தெருவில் நடந்து சென்றபோது மழைநீரில் ஏற்பட்டிருந்த மின்கசிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.
Samayam Tamil chennai woman death cctv


அலிமாவின் மரணத்துக்கு, மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று இரண்டு அதிகாரிகளை மாநகராட்சி இடைநீக்கம் செய்துள்ளது. உயிரிழந்த அலிமாவுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவருக்கு 10 வயதில் மகன் உள்ளான். ஆனால், அலிமாவுக்கும், அவரது கணவர் முகமதுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

10 வயதான மகனும் தாயை விட்டு தந்த முகமதுவிடம் உள்ளான். கடந்த 9 ஆண்டுகளாக தனது சகோதரியின் அரவணைப்பில் இருந்து வந்த அலிமா அக்கம்பக்கத்தில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்றுகூட நாராயணசாமி தெருவில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காகத்தான் சென்றுள்ளார்.

அப்போது, பூமிக்கடியில் இருந்த மின்சார கேபிளில் மின்கசிவு ஏற்பட்டிருந்தால், மழைநீரில் நடந்து சென்ற அவர் அந்த மின்சாரம் தாக்கி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு அலிமா ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

மணமேடையில் மனைவி, கணவன் ஷாக்..! கன்னியாகுமரியில் பரபரப்பு...

சிங்கார சென்னை என்ற பெருமையைக்கொண்ட தலைநகரில் அண்ணா நகர் ஒரு நிலையிலும், வட சென்னை ஒரு நிலையிலும் உள்ளது. இங்கு மழை பெய்தால் கொசு கடி முதல், மின்சார தாக்கம் வரை பல சவால்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நினைக்கும் அரசாங்கம், மழை காலங்களில் அவர்களின் உயிரை பறிக்கும் விபரீதங்களை முன்னரே தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என புளியந்தோப்பு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

அடுத்த செய்தி