ஆப்நகரம்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: சைக்கிள் கடை நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2019, 11:05 pm
திருச்சியில் தந்தையாக நினைத்து பழகிய 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Samayam Tamil 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை


பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தன் வீட்டுக்கு அருகில் சைக்கிள் கடை வைத்துள்ள முகமது இஸ்லாம் (43) என்பவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளாள். அவருக்கும் மகள் இல்லை என்பதால் மகள் அந்த நபரிடம் காட்டிய நெருக்கத்தை சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளவில்லை.

கடந்த 26ம் தேதி சிறுமியை தூக்கிக் கொண்டு சென்ற முகமது இஸ்லாம், ஐஸ் க்ரீம் வாங்கி தந்துள்ளார். பிறகு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் அழுது கொண்டே வீடு திரும்பியுள்ளா சிறுமி.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பெற்றோர்கள் கேட்டபோது, சிறுமி நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அப்பாசிடம் சென்று விசாரித்த போது, அவர் நடந்தவற்றை வெளியே கூறினால் சிறுமியை கொன்று ஆற்றில் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முகமது அப்பாஸை கைது செய்த காவல்துறை, வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி மகிழினி தீர்ப்பு கூறினார்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய முகமது அப்பாஸுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதை தொடர்ந்து குற்றவாளி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி