ஆப்நகரம்

கண்ணில் பயம், முகத்தில் சிரிப்பு... குவிந்துள்ள வழக்குகள்.. திருவாரூர் சுரேஷ் கைவிலங்குடன் ஆஜர்...

திருச்சி கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சரணடைந்த திருவாரூர் சுரேஷ் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Samayam Tamil 4 Dec 2019, 2:41 pm
திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தை அதிர செய்தது. இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து திருச்சி மாநகர தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil கண்ணில் பயம், முகத்தில் சிரிப்பு... குவிந்துள்ள வழக்குகள்.. திருவாரூர் சுரேஷ் கைவிலங்குடன் ஆஜர்...


இந்த நிலையில் முருகனுடைய கூட்டாளியான திருவாரூர் சுரேஷ் அக்டோபர் 10 ஆம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் தொடர்ச்சியாக போலீசாரின் விசாரணையில் இருந்து வந்த அவர் இன்று திருச்சி ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


சுரேஷுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு, திருச்சி கே.கே.நகரை சேர்ந்த சுதன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து, 40 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில், சுரேஷூக்கு தொடர்பிருப்பதாக, கேகே நகர் போலீசார் நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 16ஆம் தேதி வரை சுரேஷூக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்ட்ரேட் திரிவேணி உத்தரவிட்டார். அதையடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.

8வது மாடி பயங்கரம்; பிள்ளைகள் கொலை, தம்பதி தற்கொலை - விபரீதத்தின் சோகப் பின்னணி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷிடம் அவர் தரப்பிலிருந்து சில கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் நான் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதனால் கையெழுத்து போடா தெரியும். ஆனால் என்னிடம் எதற்காக கையெழுத்து வாங்குகிறார்கள் என தெரியவில்லை என இப்படி பதிலளிக்கிறார்.

திருச்சி கொள்ளையை தவிர அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி பாலக்கரையில் ஆக்சிஜன் சிலிண்டர் திருடிய வழக்கு, எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கேகே நகரில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கும் சேர்ந்துள்ளது.

அடுத்த செய்தி