ஆப்நகரம்

அறியாத்தனத்தில் வெறித்தனம்... இறந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு - 20 பேர் கைது

சென்னையில் கொரோனவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கிய விவகாரத்தில் 20 பேர் கைதாகியுள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2020, 2:13 pm
கொரோனவால் உயிரிழந்த 55 வயதான நரம்பியல் மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு அஞ்சி நாடே நாடடஙகி இருக்கும் சூழலில் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் மனநிலையை தாக்கியுள்ளது இந்த சம்பவம்.
Samayam Tamil சென்னையில் கொரோனவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 வயது மருத்துவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மயான பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சம்பவத்தை அறிந்துகொண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வழிமறித்ததோடு வாகனத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த டிரைவரை ஆயுதங்களுடன் தாக்கி மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டனர்.

பிறகு அங்கு வந்த போலீசுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததோடு, மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாதென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவரின் உடல் வேறொரு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மருத்துவ வட்டாரம் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள் வரை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குக்கரில் சாராயம் காய்ச்சிய தொழிலாளி கைது!

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் மூலம் தொற்று பரவும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என உலக அளவில் தெரிவிக்கப்பட்டிருந்தும் மக்களின் இந்த அறியாமையால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய
20 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்கள் மீது ஐபிசி188- அரசு அதிகாரி உத்தரவை மீறுதல்,147- கலவரத்தில் ஈடுபடுதல்,148 -ஆயுதங்களுடன் தாக்குதல், 341-சட்ட விரோதமாக ஒருவரை சிறை பிடித்தல் என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி