ஆப்நகரம்

ரூ.20,000க்கு விற்கப்பட்ட சிறுமிகள்; திருவாரூர் அவலத்திற்கு என்ன காரணம்?

சிறுமிகள் விற்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Dec 2019, 12:35 pm
தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வேறு குற்றச் சம்பவங்களும், சோக நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திருவாரூரில் இரண்டு சிறுமிகள் தலா ரூ.10,000க்கு விற்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Money Cheating


இதுதொடர்பாக அம்மாவட்டத்தில் உள்ள குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எங்கள் கிராமத்தை சேர்ந்த இரு சிறுமிகள் தலா ரூ.10,000க்கு விற்கப்பட்டுள்ளனர்.

சேலம்: சுவரை துளையிட்டு 300 பவுன் நகை கொள்ளை!

அவர்கள் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பின்னலாடை ஆலையில் வேலை செய்து வருகின்றனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் களத்தில் இறங்கினர். அதில் சிறுமிகளை விற்க கனகம், சகுந்தலா ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்!

மூன்று பேர் மீதும் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமிகளை மீட்க இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட எஸ்.பி உத்தரவின்பேரில் போலீசார் ஈரோட்டிற்கு விரைந்துள்ளனர்.

குழந்தைகள் ஆபாச வீடியோ: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விசாரணை!

அடுத்த செய்தி