ஆப்நகரம்

சென்னை: நகைக்கடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை ‘அபேஸ்’ செய்தவர்கள் கைது!

சென்னை அண்ணாநகர் நகைக்கடையில் நகை வாங்க வந்தவர்கள்போல் நடித்து நகையை களவாடிச் சென்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Nov 2019, 11:40 am
திருச்சி லலிதா ஜுவல்லரி போன்று சுவரை துளையிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது. ஆனால் நகை வாங்குவோர் போல பேசி விற்பனையாளர் கவனத்தை திசை திருப்பி நகைகளை மறைத்து எடுத்துச் செல்வது பல இடங்களில் நடைபெறுகிறது.
Samayam Tamil சென்னை: நகைக்கடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை ‘அபேஸ்’ செய்தவர்கள் கைது!


கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு உறுதி - உச்ச நீதிமன்றம்!

சென்னை அண்ணா நகர் தனிஷ்க் ஜுவல்லரியில் நேற்று இது போன்று ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கைகளில் கழுத்தில் நகைகள் அணிந்தவாறு வசதிபடைத்தவர்கள் போல் காட்டிக்கொண்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் நகை வாங்க வந்துள்ளனர்.

ரூ 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர்: உயிருடன் மீட்ட போலீஸார்!

தங்க செயின் பிரிவில் விற்பனையாளர்களிடம் நிறைய மாடல்களை காட்டும்படி கேட்டுள்ளனர். பல மாடல்களை பார்த்த அவர்கள் எந்த செயினும் வேண்டாம் என கிளம்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் போனபின்பு 5 சவரன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை பார்த்த ஜுவல்லரி ஊழியர்கள் அந்த இருவரில் ஒருவர் செயினை எடுத்துக்கொடுக்க மற்றொருவர் வாங்கிவைத்துக்கொள்வது தெரிந்தது. இதையடுத்து ஜுவல்லரி நிர்வாகம் சார்பில் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டன.

’தீரன்’ படத்தை மிஞ்சும் பயங்கரம்- தனி வீட்டில் இருந்த ஆசிரியைக்கு நடந்த துயரம்!

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் இவர்கள் இருவரும் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் திருட்டில் ஈடுபட்ட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அமீத் குமார், கணேஷ் மௌனிமா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி