ஆப்நகரம்

மதுரையில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை பட்டாக்கத்தியால் தாக்கிய மாணவர்கள்!

டிக்கெட் எடுக்க கூறியதால், நடத்துனரை பேருந்தில் வைத்து மாணவர்கள் வெட்டிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 30 Jul 2019, 5:05 pm
மதுரை அருகே டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை, கல்லூரி மாணவர்கள் இருவர் பட்டாக்கத்தியால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil sty


சென்னையில் சமீபத்தில், பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட ரூட் தல மோதலில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.

இந்நிலையில், டிக்கெட் எடுக்க கூறியதால், நடத்துனரை பேருந்தில் வைத்து மாணவர்கள் வெட்டிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில், தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, ராஹ்கூர் செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது நடத்துனர் கணேசன், மாணவர்களிடம் டிக்கெட் எடுக்கூமாறு கூறியுள்ளார். அதற்கு மாணவர்கள் முடியாது என மறுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருமங்கலம் அருகே பெண்ணின் தங்க செயின் பறிப்பு: ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் கைவரிசை!

தொடர்ந்து பேருந்து, கருப்பாயூரணி பகுதியில் வந்தபோது மாணவர்கள் இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து நடத்துனரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த நடத்துனர் கணேசன், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலியுடன் வசித்த சுற்றுலாத்துறை மேலாளர் தலைமறைவு!

அதேபோல், திண்டுகல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள கால்ப் கிளப் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் கபில் ராகவேந்திராவுக்கும், மற்றொரு மாணவனுக்கும் இடையே இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கபில் ராகவேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி