ஆப்நகரம்

ரயிலில் பயணம் செய்த கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த துயரம்... உபி கொடுமை..!

ரயிலில் பயணம் செய்த இரண்டு கன்னியாஸ்திரிகளை இந்துத்துவா அமைப்பினர் கீழே இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Mar 2021, 7:19 pm
வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் கார்னர் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பான்மையினரால் நிகழும் ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய கொடூரங்கள், கடலில் மூழ்கும் சிறிய கற்களை போல மறைந்து விடுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
Samayam Tamil video grab image


இந்நிலையில், ஒடிஸாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் கடந்த 19ம் தேதி நிஜாமுதீன் பகுதியில் இருந்து ரூர்கேலாவுக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஏபிவிபி (இந்து அமைப்பு) உறுப்பினர்கள் சிலர் அவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி ரயிலை விட்டு இறங்குமாறு கூறியுள்ளனர்.

அப்போது ரயில்வே போலீசாரும் உடன் உள்ளார். சிறிது நேர வாக்குவாதத்துக்கு பின்னர் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேரையும் அந்த கும்பல் ஜான்சி காவல் நிலையத்தில் வெளியேற்றி விடுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்குள் ஆனதால் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஸ்டைல் தாடி, திருமணமான பெண்ணுக்கு வந்த ஆசை, பக்கத்துக்கு வீட்டு பையன் லூட்டி

மேலும், கன்னியாஸ்திரிகளை ரயிலில் பயணம் செய்ய விடாமல் தடுத்து கீழே இறக்கிவிட்ட ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், '' "தனிப்பட்ட சுதந்திரத்தை சீர்குலைக்கும் அமைப்புகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி