ஆப்நகரம்

புதுச்சேரி: மதுபான விடுதியில் காசுக்கு பதிலாக வெடிகுண்டை கொடுத்த இளைஞர்கள்!

புதுச்சேரியில் நேற்று இரவு மதுபான விடுதியில் நாட்டு வெடிகுண்டை எறிந்த இளைஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Samayam Tamil 16 Dec 2019, 11:42 am
புதுச்சேரி திருபுவனையில் அமைந்துள்ளது ரீகன் மதுபான விடுதி. இங்கு நேற்று இரவு 9.40 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் ஊழியர் வந்து பணம் கேட்டதற்கு தர மறுத்துள்ளனர். ஊழியர் காசாளரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
Samayam Tamil மதுபான விடுதியில் காசுக்கு பதிலாக வெடிகுண்டை கொடுத்த இளைஞர்கள்


காசாளர் கேட்டும் பணம் தர மறுத்த அந்த மூன்று இளைஞர்களும் அவரையும் மிரட்டியதோடு, தங்களுக்கு பணம் தரவேண்டும் என்றும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதில் இரு இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை மது பான விடுதிமீது எறிந்தனர்.

உ.பி.யில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்துக் கொலை: 4 பேர் மீது வழக்கு

இதனால் மது பான பாட்டில்கள் நொறுங்கியதோடு இரு ஊழியர்கள் காயமடைந்தனர். அதன்பின் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

டிக் டாக் வீடியோ: தோழியுடன் மாயமான பெண் - வலைவீசி தேடும் போலீஸார்!

அதைத் தொடர்ந்து காசாளர் திருபுவனை போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் அந்த மூன்று இளைஞர்களும் வெடி குண்டுவீசும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.

எங்கே அந்த 126 சவரன்? விழிக்கும் போலீஸ் - உச்சிப்புளியில் அப்படியென்ன நடந்தது!

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக பைகளில் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர், இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

அடுத்த செய்தி