ஆப்நகரம்

பொதுத்தேர்வில் ஃபிராடு பண்ணி பாஸ் ஆவது எப்படி? டிப்ஸ் கொடுத்த முதல்வரை சிக்க வைத்த மாணவர்கள்!

மாநில அளவிலான பொதுத்தேர்வில் மாணவர்கல் முறைகேடு செய்து தேர்ச்சி அடைவது எப்படி என்று டிப்ஸ் கொடுத்த பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 20 Feb 2020, 2:07 pm
பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் நல்ல முறையில் அறிவுரை கூறுவது வழக்கம்.
Samayam Tamil UP Principal


ஆனால் மோசடி செய்து தேர்ச்சி அடைவது எப்படி என்று பள்ளி முதல்வரே மாணவர்களுக்கு கூறினால் அது எத்தகைய மோசமான விஷயமாக இருக்கும். அப்படியொரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

அங்கு கடந்த 18ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாவ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த முதல்வர் பிரவீன் மால், பொதுத்தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெறுவது பற்றி ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

எங்கே இருக்கிறார் நித்யானந்தா?- சுற்றி வளைக்க கிடுக்குப்பிடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

அவர் பேசுகையில், நமது மாணவர்கள் யாரும் தேர்வில் தோல்வியடையப் போவதில்லை. அதனால் யாரும் பயப்பட வேண்டாம். தேர்வறையில் பேசிக் கொள்ளுங்கள். ஆனால் பிறரை தொட்டு பேசாதீர்கள்.

தேர்வறையில் இருக்கும் கண்காணிப்பாளர்கள் பலரும் என்னுடைய நண்பர்கள் தான். எனவே நீங்கள் மாட்டிக் கொண்டாலும் பயப்பட வேண்டாம். அவர்கள் கன்னத்தில் அறைவார்கள். அதை மட்டும் தாங்கிக் கொள்ளுங்கள்.

அதேசமயம் விடைத்தாளில் எந்தவொரு கேள்விக்கான பதிலையும் விட்டு விடாதீர்கள். எதையாவது எழுதி வையுங்கள். அப்படியே ரூ.100ஐ விடைத்தாளில் வைத்து விடுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உரிய மதிப்பெண்களை அளித்து விடுவர் என்று மாணவர்களிடையே பேசியுள்ளார்.

இதனை சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். அதேசமயம் முதலமைச்சரின் குறைதீர்க்கும் இணையப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்து புகார் அளித்துள்ளனர்.

என்ன நடந்தது? எப்படி இந்த ரத்த காயம்?- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டும் சிக்கல்!

இதுபற்றி தகவலறிந்த போலீசார் உடனே அந்த பள்ளி முதல்வரை கைது செய்துள்ளனர். வருங்கால சமுதாயத்தை உருவாக்கப் போகும் மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்பிக்காமல் இப்படி செய்தால் எப்படி நம் நாடு முன்னேற்றம் காணும்.

அடுத்த செய்தி