ஆப்நகரம்

தீக்குளிக்க முயன்ற விசிக உறுப்பினர்... தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்ற விசிக உறுப்பினரால் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 22 Nov 2021, 4:25 pm
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (48). விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினராக உள்ளனர். அவருக்குச் சீனிவாசா நகர் பகுதியில் சொந்தமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முற்படுவதாகவும்,
Samayam Tamil தற்கொலைக்கு முயன்றவர்

இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் தற்போது சாலை அமைத்து வருகிறது. எனவே, அதனை நிறுத்த வேண்டும் என கோரி தேனி ஆட்சியரிடம் மனு அளிக்க பெரியகருப்பன் வந்துள்ளார்.

அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட பணியில் இருந்த பெண் காவலர்கள் அவரை தடுத்து மீட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர், பெரிய கருப்பனை தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பட்டப்பகலில் பெண்கள் செய்யும் அட்டூழியம்... வராங்க, பண்றாங்க, போறாங்க... ரிப்பீட்டு

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், இடம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது. பிரச்சனைக்குரிய குறிப்பிட்ட அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைத்து வருகிறது என தெரிவித்தனர்.

அடுத்த செய்தி