ஆப்நகரம்

இழிசொல் வந்துவிடக்கூடாது என ஒரு வயது மகனை கொன்றேன்- வேலூர் பெண் வாக்குமூலம்

குடித்துவிட்டு தொல்லை தந்தால் கணவரை கொன்றதாகவும், கொலைகாரியின் குழந்தை என யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக மகனையும் கொன்றதாகவும் வேலூர் பெண் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 May 2019, 11:51 am
தினமும் குடித்துவிட்டு தொல்லை அளித்து வந்ததால் கணவரையும், அவருடன் சேர்ந்து தனது ஒரு வயது குழந்தையையும் கொன்றதாக வேலூர் பெண் தெரிவித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கணவர், மகன் கொல்லப்பட்ட காரணம் இதுதான்- வேலூர் பெண் வாக்குமூலம்
கணவர், மகன் கொல்லப்பட்ட காரணம் இதுதான்- வேலூர் பெண் வாக்குமூலம்


ஆற்காடு பகுதியை சேர்ந்த தீபிகா, கடந்த 13ம் தேதி தன்னுடைய கணவர் ராஜா மற்றும் ஒரு வயது மகன் பிரனீஷ் ஆகியோரை காணவில்லை என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகாவின் மீது சந்தேகம் அடைந்த ராஜாவின் அக்கா லட்சுமி இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

தீபிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் ராஜாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனால் குழந்தையையும் தூக்கிக்கொண்டு அப்பெண்ணுடன் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் போலீசாருக்கு தீபிகா மீது கடும் சந்தேகம் எழுந்தது. அவர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவர் ராஜா மற்றும் ஒரு வயது குழந்தையை இருவரையும் சாத்தூர் ஏரி அருகே கொன்று புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.

தீபிகா கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள், கணவர் மற்றும் குழந்தையை கொன்றதற்கான காரணத்தை கேட்டனர். ராஜா தினமும் குடித்துவிட்டு தொல்லை தந்ததாகவும், அதனால் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். கொலைகாரியின் மகன் என்ற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது குழந்தையையும் கொன்றதாக தீபிகா வாக்குமூலம் அளித்தார்.

தீபிகாவின் பதிலை கேட்டு அதிர்ச்சி அடந்த காவல்துறையினர், தீபிகா இந்த கொலைகளை தனியாக செய்திருக்க முடியாது. அவருக்கு வேறு யாரோ உதவியுள்ளார். தீபிகாவுக்கும் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆற்காடு வட்டாட்சியர் வச்சலா மற்றும் வேலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் தீபிகாவின் கணவர் மற்றும் குழந்தையை புதைக்கப்பட்ட இடத்தில் சடலங்களை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

மேலும், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கணவரோடு சேர்ந்த, ஒரு வயது குழந்தையையும் கொலைசெய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி