ஆப்நகரம்

ஆபாச வீடியோ பார்த்தாலும் கைது; அப்படியே இவங்களுக்கும் ஆப்பு - ஏடிஜிபி எச்சரிக்கை!

ஆபாச வீடியோ பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மற்றொரு முக்கிய விஷயத்தை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2020, 9:33 am
நாட்டிலேயே சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை குற்றங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். சிறார் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.
Samayam Tamil ADGP Ravi


அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இந்த சூழலில் சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ கடமைகள் பற்றி விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி ரவி, போக்சோ சட்டம் என்றால் என்னவென்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

குரூப் 2ஏ முறைகேடு: அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்; வேட்டையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

அதன்படி 60 நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஓராண்டிற்கு நீதிமன்றத்தில் விசாரணையை முடித்து தண்டனையும் அளிக்க வேண்டும். குற்றம் நடைபெறுவதை பார்த்த பின்பு, அதனை போலீசாருக்கு தெரிவிக்காவிட்டால் நீங்களும் குற்றவாளிகளே.

போக்சோ சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தை பள்ளி ஆசிரியர்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி ரவி, தமிழகத்தில் ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்தவர்கள், பகிர்ந்து கொண்டவர்கள் என 630 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை..! சென்னையில் பயங்கரம்..

கைது நடவடிக்கைகள் மூலம் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேசமயம் காவலன் செயலியும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அனைவரும் சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

அடுத்த செய்தி