ஆப்நகரம்

சென்னை பயங்கரம்; குடும்பத்தார் கண்முன் அடித்துக் கொலை - அதிரவைக்கும் பின்னணி!

கடந்த ஞாயிறு இரவு, குடும்பத்தார் கண்முன்னே ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 May 2019, 1:16 pm
இரு வாரங்களுக்கு முன்பு, சென்னை அயனாவரத்தில் குழந்தை திருமணம் நடக்கவிருந்தது. இதுதொடர்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கண்டு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலனுக்கு(48) தெரியவந்தது.
Samayam Tamil Dead


அவருக்கு அப்பெண்ணை நன்றாகத் தெரியும். அவருக்கு 16 வயது மட்டுமே ஆகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசாருடன் சென்று, நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு, ஜெபசீலனின் மகளுக்கு திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிறு இரவு நடந்தது. இதுகுறித்து வினோத்திற்கு தகவல் தெரிந்துள்ளது.

அவர் தான் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய இருந்தார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஜெபசீலனை கொல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிறு இரவு 7.45 மணிக்கு, ஜெபசீலன், மனைவி பிரிஸ்சில்லா மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து திக்காகுளம் பகுதிக்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது பைக்கில் வந்த சிலர், அவர்களை வழிமறித்தனர். பின்னர் ஜெபசீலனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரைக் காப்பாற்ற முயன்ற பிரிஸ்சில்லாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜெபசீலன் படுகாயம் அடைந்து, உயிரிழந்துள்ளார். காயமடைந்த பிரிஸ்சில்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி