ஆப்நகரம்

கர்ப்பத்துக்கு யார் காரணம்? சொப்ன சுந்தரியும் 3 மாப்பிள்ளைகளும்...

திருப்பதி அருகே ஐபிஎஸ் என்று கூறி மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் வசமாக சிக்கினார்.

Samayam Tamil 28 Jul 2020, 5:42 pm
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சொப்னா. இவர் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று மேட்ரிமோனியில் குறிப்பிட்டு மாப்பிள்ளை தேடியுள்ளார். அப்போது டென்மார்க்கில் பணிபுரிந்து வந்த ராம ஆஞ்சநேயலு என்பவர் சொப்னாவுக்கு திருமண ப்ரோபோசலை அனுப்பியுள்ளார். அதன் பின்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
Samayam Tamil Fake IPS swapna


சில நாட்களாக சொப்னாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த ராம ஆஞ்சநேயலு, பணி நிமித்தமாக டென்மார்க்கிற்கு செல்ல தயாராகினர். அப்போது தனது மனைவியையும் உடன் அழைத்து செல்ல விரும்பிய அவரிடம் சொப்னா செல்ல மறுத்துவிட்டார். கணவன் டென்மார்க் சென்றதும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற சொப்னா, தன்னை உங்கள் மகன் ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என குற்றம் சாட்டினார். மேலும், இழப்பீடாக 30 லட்சம் கொடுங்கள் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ராம ஆஞ்சநேயலுவின் பெற்றோர் தொனகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சொப்னாவின் கடந்த கால சூழ்ச்சிகள் அனைத்தும் கட்டவிழ்க்கப்பட்டது. போலி ஐபிஎஸ் ஆக தன்னை மேட்ரிமோனியில் அறிமுகப்படுத்திக்கொண்ட சொப்னா ஏற்கெனவே இரண்டு பேரை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார்.

முதலில் சித்தூரைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரை திருமணம் செய்து 20 லட்சத்தையும், ஆத்மகூரை சேர்ந்த சுதாகர் என்பவரை ஏமாற்றி 30 லட்ச ரூபாயையும் ஏமாற்றியிருக்கிறார். இதனால் அவர் மீது ஏற்கெனவே திருப்பதி காவல்நிலையத்தில் முதல் மாப்பிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

எனினும், ராம ஆஞ்சநேயலு வரை தன்னுடைய மோசடியை தொடர்ந்துள்ளார் சொப்னா. மேட்ரிமோனியல் மூலமாக தேடி வரும் பணக்கார மாப்பிளையை திருமணம் செய்துகொண்டு, ஐபிஎஸ் அதிகாரி என்று மிரட்டி மாமியார் வீட்டில் பணம் பறிப்பதும், கணவர் மீது பொய் புகார் கொடுப்பதும் சொப்னாவின் முதலடியாக இருந்து வந்துள்ளது.

15 வயசு சிறுமி பலநாள் பலாத்காரம்... எக்ஸ் எம்எல்ஏ அட்டூழியம்..!

தற்போது மூன்று மாதமாக கர்ப்பிணியாக உள்ள சொப்னா அதற்கு டென்மார்க் மாப்பிள்ளை ராம ஆஞ்சநேயலு தான் காரணம் என்கிறார். ஆனால், திருமணம் ஆன நாளிலிருந்து நான் சொப்னாவிடம் தாம்பத்திய உறவில் ஈடுபடவே இல்லை என ராம ஆஞ்சநேயலு மறுக்கிறார். இந்நிலையில் சொப்னாவை கைது செய்து காப்பகத்தில் வைத்துள்ள போலீசார், அவருக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

அடுத்த செய்தி