ஆப்நகரம்

'காசு இல்லைங்க சார், தாலியை வேணா வித்துடுங்க'..! மனமிரங்கிய டிராஃபிக் போலீஸ்

கர்நாடகா: அபராத தொகைக்கு காசு இல்லாததல் போக்குவரத்து போலீசாரிடம் தாலி சங்கிலியை கழட்டி கொடுத்த பெண்

Samayam Tamil 28 Feb 2021, 8:17 pm
கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பாரதி விபூதி (30). இவர் தனது கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, சிட்டி பேருந்து நிலையம் அருகே இவர்களை மடக்கிய போலீசார் ஹெல்மெட் அணியாததற்கு 500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர்.
Samayam Tamil mangalsutra instead of fine


அப்போது, கையில் காசு இல்லை என்று கூறிய பாரதி விபூதி, கணவருடன் கட்டில் வாங்குவதற்காக ரூ.1,800ஐ எடுத்துக்கொண்டு சந்தைக்கு சென்றதாகவும், 1,700க்கு கட்டிலை வாங்கி , மீதமுள்ள 100 ரூபாயை காலை உணவுக்காக செலவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆனால், அபராதத்தை கட்டியே ஆக வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதி விபூதி தன்னுடைய தாலியை கழற்றி அதை விற்று அபராதத்தை எடுத்துக்கொள்ளுமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். அதனால் போலீசாருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

செல்போன் பேச்சு பிடிக்காததால் தங்கையை கொலை செய்த அண்ணன்..! சீர்காழியில் பரபரப்பு

இதை கவனித்துக்கொண்டிருந்த அப்பகுதியில் சென்றவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக சென்ற சில மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தில் தலையிட்டு விபூதியையும் அவரது கணவரையும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சாலை விதிகளை கடைபிடிக்காவிட்டால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றாலும் காசு இல்லாததால் பெண் ஒருவர் தாலி சங்கிலியை கழட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி