ஆப்நகரம்

'திருடன் கையில் சாவி'... கோவை குற்றப்பிரிவு பெண் போலீஸ் கைது..!

கோவை அருகே குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் நகை கொள்ளை வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jun 2020, 3:08 pm
கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் சுவப்ன சுஜா. இந்த காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தார். அதில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிமன்றத்திலும் ஒப்படைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியையும் செய்து வந்தார்.
Samayam Tamil கோவை குற்றப்பிரிவு பெண் போலீஸ் கைது


இந்நிலையில் 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை சுவப்ன சுஜா வசம் வழங்கியிருந்தனர். ஆனால் நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் சொப்பன சுஜா.

மேலும், இது குறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டால், முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததோடு, சில உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்துள்ளார். நீண்ட நாட்களாக நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சுவப்ன சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டார்.

மகள் அலட்சியம், காதலன் எல்லை மீறல்... மானத்திற்காக போராடும் அம்மாக்கள்...

இதனால் பயந்து போன பெண் காவலர் நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சுவப்ன சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் உரிய பதில் தராமல் 50 சவரன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து, சுவப்ன சுஜாவை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சொப்பன சுஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுஜா, கடந்த 7 ஆண்டுகளில் நிலுவையில் இருந்த 80க்கும் மேற்பட்ட வழக்குகளை, உரிய சாட்சிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று முடித்துள்ளதாக 2018ம் ஆண்டு நீதிபதியிடம் பரிசு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி