ஆப்நகரம்

கேரளாவில் இளைஞரை தாக்கி வீடியோ போட்ட சம்பவம்... பதைபதைக்கும் வீடியோ

கேரள மாநிலம் கொல்லம் அருகே இளைஞரை ஆவேசமாக தாக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

Samayam Tamil 7 Aug 2022, 2:42 pm
கேரள மாநிலம் கொல்லம் வள்ளி குன்னம் பகுதியைச் சேர்ந்த அச்சு என்பவரை இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. தன்னை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பதிவிட்டதாக ஆவேசமடைந்து அச்சுவை அந்த வாலிபர் தாக்கியதோடு தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரல் செய்துள்ளனர்.
Samayam Tamil kerala news


இந்நிலையில் இந்த தாக்குதல் மற்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்ட கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞரை கடுமையாக தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

வாலிபரை தாக்கிய வாலிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் எஸ்ஐக்கு கள்ளக்காதல்..? ஆடியோவில் கதறிய கணவன் தற்கொலை.! மதுரை பரபரப்பு

சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவிட்டதாகக்கூறி ஒருவரை மற்றொவர் கொலை வெறியுடன் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி