ஆப்நகரம்

ஒரே ஒரு முத்தம்... 17 ஆண்டுகள் ஜெயில்... அரியலூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 21 May 2022, 11:50 am
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அத்துமீறிய மாரிமுத்து சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அரியலூர் காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
Samayam Tamil அரியலூர் போக்சோ வழக்கு


அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மாரிமுத்துவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் மாரிமுத்துவை குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, மாரிமுத்துவை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். மேலும், மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சிறுமிகளிடம் அத்துமீற நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

எலிக்கு வைத்த பொறி... பெண் எஞ்சினியர் காவு.. எச்சரிக்கை செய்தி..!

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி