ஆப்நகரம்

விசிக ஒரே போடு.. பாமக, அதிமுக டெபாசிட் இழந்து ஓட்டம்!

மறுவாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கையில் வீறு கொண்டு எழுந்த விடுதலை சிறுத்தையை பார்த்து பாமக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்து ஓட்டம் பிடித்தனர்.

Samayam Tamil 25 Feb 2022, 6:40 pm
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்து உள்ளது.
Samayam Tamil திருமாவளவன்
திருமாவளவன்



இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது, தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது.

திமுக வென்றும் பலனில்லை; வேதனையில் முதல்வர் ஸ்டாலின்!

இந்த வாக்கு எண்ணிக்கையின்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டு வாக்குச்சாவடி எண் 4ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுது அடைந்தது. இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி புவனகிரி பேரூராட்சி 4வது வார்டுக்கான மறுவாக்குப்பதிவு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களித்தனர்.

மார்ச் 1ம் தேதி அரசு விடுமுறை; வெளியானது அதிரடி அறிவிப்பு!

பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்தில் இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

புவனகிரி பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில், விசிக வேட்பாளரை தவிர அதிமுக, பாமக மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்து ஓட்டம் பிடித்தனர்.

அடுத்த செய்தி