ஆப்நகரம்

கடலூர் அருகே குவாட்டர் பாட்டிலில் பல்லி... குடிமகன் அதிர்ச்சி!

கடலூர் அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய குவாட்டர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி செத்து கிடந்ததால் மதுபிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 May 2023, 6:34 pm

ஹைலைட்ஸ்:

  • 140 ரூபாய்க்கு குவாட்டர் பாட்டில் வாங்கிய இளைஞர்
  • பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி
  • மழுப்பலாக பதில் அளித்த கடை விற்பனையாளர்
  • தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்
  • மது பிரியர்கள் கடை முன்பு குவிந்ததால் பரபரப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குவாட்டர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி
குவாட்டர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி
குவார்ட்டர் பாட்டில் வாங்கிய இளைஞர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அரசக்குழி கிராமத்தில் அமைந்துள்ள கடை எண் 2647 என்ற அரசு மதுபான கடையில் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞர், Seemens என்ற 130 ரூபாய் மதிப்புள்ள குவார்ட்டர் பாட்டிலை 140 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

இறந்த நிலையில் பல்லி

அப்போது குவார்ட்டர் பாட்டிலை பரிசோதித்தபோது இறந்த நிலையில் பல்லி செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மழுப்பலாக பதில்

இதனால் ஆத்திரம் அடைந்த மதுப்பிரியர் ராம்கி, சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்டபோது மழுப்பலாக பதில் அளித்து விட்டு வேறு குவாட்டர் பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் ராம்கி பல்லி விழுந்த குவாட்டர் பாட்டிலை தர மறுத்துள்ளார்.

தரமற்ற முறையில் மதுபானங்கள்

மேலும் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல்லி செத்து கிடக்கும் குவாட்டர் பாட்டிலை தெரியாமல் குடித்திருந்தால் எனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் எனத் தெரிவித்தார்.
அதிக வெப்பத்தால் டயர் வெடித்து அடுத்தடுத்து விபத்து - கடலூரில் ஒருவர் பலி
அரசுக்கு அக்கறையில்லை

குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம், விலையை விட அதிகமாக விற்பனை செய்ய தெரிந்த அரசுக்கு மது பிரியர்கள் மீது அக்கறையில்லை. மரக்காணத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் போல், தரமற்ற மது விற்பனையால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கடை முன்பு குவிந்த மது பிரியர்கள்

குவாட்டர் பாட்டிலில் பல்லி செத்து கிடந்த சம்பவத்தினால் கடைக்கு வந்த மது பிரியர்கள் கடை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தரமற்ற முறையில் மதுபாட்டிலை தயாரித்த நிறுவனம் மற்றும் மதுபாட்டில்களின் தரத்தினை பரிசோதிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி