ஆப்நகரம்

ஒரே நேரத்தில் 2 கோயில்களில் கொள்ளையடித்த தீக்‌ஷிதரை செம பிளான் போட்டு பிடித்த கடலூர் போலீஸ்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் 2 கோவில்களில் ஒரே நேரத்தில் திருடிய நபரை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Samayam Tamil 4 Oct 2021, 7:14 pm
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அதேபோல் ராஜா தியேட்டர் அருகே அமைந்திருப்பது கஜமுக விநாயகர் ஆலயம். இந்த 2 கோயில்களிலும் கொள்ளையடித்த நபரை போலீசார் அதிரடியாக 4 நாட்களில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Samayam Tamil ஒரே நேரத்தில் 2 கோயில்களில் கொள்ளையடித்த தீக்‌ஷிதரை செம பிளான் போட்டு பிடித்த கடலூர் போலீஸ்!


தகவல்படி கடந்த 30ஆம் தேதி அன்று மேலே குறிப்பிட்ட 2 கோயில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு கோவில் பணம் திருடு போயிருந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் காவல்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்பொழுது நெய்வேலி இந்திராநகர் சாய்பாபா கோவிலில் தீக்ஷிதர் ஆக இருந்து வரும் பாலாஜி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே நின்று கொண்டிருந்த பாலாஜியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கோயில்களில் கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நபரிடமிருந்து திருடுவதற்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ரூபாய் 2 ஆயிரத்து 445 பணம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாஜியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கோவில் தீக்ஷிதர் ஆக பணியாற்றியவர் கோவில் உண்டியலை உடைத்துத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி