ஆப்நகரம்

டாக்டர்களை முடக்கும் கொரோனா; பீதியில் பொதுமக்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகம் எடுத்து டாக்டர்களை முடக்கி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். காக்கும் காவல் தெய்வங்களாகிய டாக்டர்களுக்கே இந்த நிலையா? என்று பீதியில் பெருமூச்சு விடுகின்றனர்.

Samayam Tamil 23 Jan 2022, 4:30 pm
கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை 68 ஆயிரத்து 643 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 878 பேர் பலியான நிலையில் 64 ஆயிரத்து 934 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக மேலும் 587 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கடலூர் அரசு மருத்துவமனை
கடலூர் அரசு மருத்துவமனை



இவர்களில் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து கடலூர் வந்த 3 பேர், கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 108 பேர் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, டாக்டர் பிரதீப், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ராஜேஷ், கோபாலகிருஷ்ணன் உள்பட 476 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

உடைந்து போன உதயநிதி ஸ்டாலின்; வெற்றி தேடி தந்த தொண்டர் மறைவு!

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா நோய் பாதிப்பு 69 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 339 பேர் குணம் அடைந்ததை அடுத்து தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,071 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை 17ல் இருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் இலக்கு; திமுகவுக்கு ஷாக் தந்த திருமா!

இதற்கிடையே புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கும் தகவல் வைரலாக பரவி வருவதால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி