ஆப்நகரம்

நிலம் எங்கள் உரிமை: என்எல்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கிராமங்கள்!

நெய்வேலி என்எல்சி நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராகக் கறுப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 20 May 2022, 5:43 pm

ஹைலைட்ஸ்:

  • என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்க விரிவாக்க பணி
  • அதிகாரிகளை கிராமத்திற்குள் நுழையவிடாமல் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கிராம மக்கள் போராட்டம்.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. நெய்வேலியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட் ஆகும்.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து வரும் நிலையில் ஏற்கனவே சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்று A, சுரங்கம் 2 ஆகிய பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடி சோழகன், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பகுதிகள் அனைத்துமே கரும்பு, உளுந்து, சிறு தானியங்கள், காய்கறிகள் என விவசாயத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருப்பதால் என்எல்சி நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்தினால் நில உரிமையாளர்கள், அதனை நம்பி வாழும் விவசாய கூலி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெஞ்சுக்கு நீதி, வயித்துக்கு பிரியாணி- அதுமட்டுமல்ல டிக்கெட்டும் இலவசம்!
இந்நிலையில் இன்று நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த வந்த அதிகாரிகளை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அப்போது நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளையும் என்எல்சி நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் சேத்தியாதோப்பு டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கரிவெட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டதால் அக்கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி