ஆப்நகரம்

போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டி.. கையும் களவுமாக பிடித்த போலீசார்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.‌

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 25 Nov 2022, 1:50 pm

ஹைலைட்ஸ்:

  • போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டி
  • பல இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்றியது அம்பலம்
  • போலீஸார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டி
போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டி

திட்டக்குடி அருகே போலி நகையை அடகு வைக்க வந்த மூதாட்டி கையும் களவுமாக பிடிபட்டார். இதே போல் பல இடங்களில் போலி நகையை அடகு வைத்தது தெரிய வந்ததையடுத்து போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோதிலால் (38). தனியார் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்றும் இரவு 7 மணி அளவில் பெண் ஒருவர் இரண்டு வளையல்களை எடுத்துக்கொண்டு தான் குறைக்க வாடி கிராமத்தை சேர்ந்தவர் எனவும், மருத்துவ செலவிற்காக நகை அடகு வைக்க வேண்டும் எனக் கூறி கடைக்குள்ளே சென்றுள்ளார்.


அடகு கடை வைத்திருக்கும் மோதிலாலுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது உறவினர்கள் போலி நகைகளை அடகு வைக்கும் கும்பல் சுற்றி வருவதாக வாட்ஸ் அப் குழுவில் தகவல் கொடுத்திருந்தனர். அப்பொழுது ஒரு புகைப்படத்தையும் அனுப்பி உள்ளனர். அந்த புகைப்படமும் இன்று கடைக்கு வந்த பெண்ணின் புகைப்படமும் ஒத்து போனதால் சுதாரித்துக் கொண்ட மோதிலால், உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த பெண் கொண்டு வந்தது போலி நகை என்பதும் அடகு வைக்க வந்த பெண் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த ரோஸ்லின் (56) என்பதும், இவருடன் ஒரு பெண் வந்ததாகவும் இவர் மாற்றிக் கொண்டவுடன் அந்தப் பெண் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இப்பவாவது வந்தீங்களே.. ஆனா நீங்க ரொம்ப லேட்டு.. பிஏபி வாய்க்கால் தண்ணீர் திருட்டு குறித்து அதிகாரிகள் ஆய்வு!

ராமநத்தம் போலீசார் இரண்டு வளையல்களையும் கைப்பற்றி, ரோஸ்லினை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் சிறுப்பாக்கம் பகுதியில் 4 கிராம் நகையும், கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கரம்பாளையம் பகுதியில் 10 கிராம் போலி நகையை அடகு வைத்தது தெரியவந்தது . இதனால் தனியார் அடகு கடை நடத்தி வருவோம் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பல இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்றி வரும் மூதாட்டியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி