ஆப்நகரம்

பாய்ச்சலுக்கு தயாராகும் தேமுதிக; பிரேமலதா..தொண்டர்கள் ஹேப்பி!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது கோயில் வாசலில் கிடைத்த நல்ல செய்தியை கேட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் மூலம் தேமுதிக அடுத்த கட்ட பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 21 Oct 2021, 9:06 pm

ஹைலைட்ஸ்:

  • கோயில் வாசலில் கிடைத்த ஓர் செய்தி
  • பிரேமலதா விஜயகாந்த்.. செம ஹேப்பி
  • தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகம்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு அண்டை மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும், சுவாமி தரிசனம் மற்றும் நேர்த்திக் கடன் செய்ய வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வந்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கோவிலின் முன்பாக காத்திருந்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் கோவிலில் தீபமேற்றி வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர் தேமுதிக கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராமதாசை சீண்டிய திருமாவளவன்; கொதிக்கும் தைலாபுரம் தோட்டம்!

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோரை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், ‘பூவராகவரை தேடி வந்து குறையை சொல்லிட்டாலே அது கண்டிப்பாக நிறைவேறும்.

வன்னியர்களுக்காக பாடுபடும் திருமா; பாமகவை பங்கம் செய்த வேல்முருகன்!

பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவது தான் இந்த கோயிலில் உள்ள சிறப்பு என்பதால் விரைவில் கேப்டன் விஜயகாந்த் குணமடைவார். கவலை வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.



இதை கேட்டு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் நிர்வாகிகள் உறுதியாக கூறி இருப்பதை வைத்து பார்க்கும்போது, தேமுதிக அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி