ஆப்நகரம்

கடலூர் மாற்றுதிறனாளிகள் மண்சோறு உண்டு போராட்டம்!!

கடலூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்க சொல்லி மாற்றுதிறனாளிகள் மண்சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

Samayam Tamil 3 Apr 2018, 6:24 pm

கடலூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்க சொல்லி மாற்றுதிறனாளிகள் மண்சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
Samayam Tamil saljkdfnaljnsda


இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை வரும் 9ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசும் மேலும் 3 மாத அவகாசம் கேட்டும், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கான அர்த்தம் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்கடலூரில் காவிரி மேலாண்மை அமைக்காத மத்தியஅரசுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்றுமாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். கடலூரில் உள்ள கோவிலுக்கு முன் அமர்ந்த மாற்றுத்திறனாளிகள்வீர முழக்கங்களைகூறிக்கொண்டேமண் சோறு சாப்பிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது ‘’ காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட பாரத பிரதமருக்கு நல்லபுத்தி கொடு என்றும் மேலும் மிக விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

அடுத்த செய்தி