ஆப்நகரம்

லட்சியத்தை அடைந்த பிச்சைக்காரர்; திடீரென வந்த அரசு பணி!

பிச்சைக்காரர் ஒருவருக்கு அரசு பணி கிடைத்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 6:56 pm
ஆந்திரா மாநிலம், பாத்தப்பட்டனம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தை சேர்ந்தவர் கேதாஸ்வர ராவ் (55). தனது சிறு வயதில் பெற்றோரை இழந்த கேதாஸ்வர ராவ் தனது உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil ஆசிரியராக மாறிய பிச்சைக்காரர்
ஆசிரியராக மாறிய பிச்சைக்காரர்


இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வேலை செய்து கொண்டே படிப்பிலும் கேதாஸ்வர ராவ் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனாலும் நல்ல வேலை எதுவும் கிடைக்காமல் போதிய வருவாய் இல்லாமல் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிச்சைக்காரர் கேதாஸ்வர ராவ்வுக்கு அரசு பணிக்கான உத்தரவு வந்திருப்பது தான் தற்போது ஆந்திரா மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.

காலை வாரிய கட்சி; காற்றை புடுங்கிய நிர்வாகிகள்; காவல் தெய்வம் ஓபிஎஸ்சின் திக் திக் திக் நிமிடங்கள்!

அதாவது கடந்த 1994ம் ஆண்டு அரசு ஆசிரியர் பணிக்கு கேதாஸ்வர ராவ் தேர்வெழுதி உள்ளார். ஆனால் அதில் அவர் தேர்ச்சிப்பெறவில்லை. இதையடுத்து கேதாஸ்வர ராவ் கடந்த 96 மற்றும் 98ம் ஆண்டுகளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு ஆசிரியர் பணிக்கு கேதாஸ்வர ராவ் பதிவு செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு பணி கிடைக்கவில்லை. எனவே உடை மற்றும் ஒருவேளை உணவு கிடைக்காமல் ஏங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு 26 ஆண்டுகள் கழித்து தற்போது அரசு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுப்பெறும் வயதில் பணி ஆணை வந்திருக்கும் செய்தியை கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்துக்கொண்ட கேதாஸ்வர ராவ் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இப்படியும் ரசிகர் கூட்டமா?; நெகிழ்ந்து போன நடிகர் விஜய்!

மேலும், மாணவர்களுக்கு பாடம் நடத்த தாம் ஆர்வமுடன் இருப்பதாக கூறி வருகிறார். இதற்கிடையே பிச்சைக்காரராக இருந்து அரசு ஊழியராக மாறிய கேதாஸ்வர ராவ் குளிக்க வைத்தும், முடித்திருத்தம் செய்து வைத்தும், கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி