ஆப்நகரம்

தருமபுரி: ஒற்றை யானையிடம் வம்பிழுத்த இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ!

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் உணவு தேடி சுற்றித்திரிந்த ஒற்றை யானையிடம் இளைஞர்கள் சிலர் வம்பிழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 13 May 2022, 7:34 am
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் சின்னாறு, காவிரி ஆறு செல்வதால், வறட்சியான காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி கர்நாடகா மாநிலத்திலிருந்து ஒகேனக்கல்லை சுற்றி உள்ள வனப்பகுதியில் யானைகள் முகாமிடுவது வழக்கம்.
Samayam Tamil elephant video


அந்த வகையில் இந்தாண்டும் கோடைக்கு முன்னரே 100-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பாதையை கடந்து செல்கிறது.

அப்போது அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யானையுடன் செல்பி எடுப்பதும், விரட்டுவதும், சத்தம்போடுவதும் என யானையிடம் வம்பு இழுக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

அதேபோல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பாதையில் யானை ஒன்று தண்ணீர் குடித்துவிட்டு ரோட்டை கடக்கும் போது அங்கிருந்தவர்கள் யானையை செல்போனில் படம் எடுத்துள்ளனர். அப்போது சிலர் சத்தம்போட்டு விரட்டுகின்றனர்.

இதனால் யானைகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி