ஆப்நகரம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் மீது ஆசிட் ஊற்றி அழிக்கும் வெறியர்கள்: தருமபுரியில் கொடூரம்!

தருமபுரி அடுத்த தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி எல்என்டி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2021, 6:13 pm
Samayam Tamil தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் மீது ஆசிட் ஊற்றி அழிக்கும் வெறியர்கள்: தருமபுரியில் கொடூரம்!
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக செல்கிறது.

இந்த சாலையை எல்என்டி, நிர்வாகம் பராமரித்து வருகிறது. தொப்பூர் முதல் கிருஷ்ணகிரி வரையிலான சாலையோரங்களில் இருபுறமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 15 வகையான மரங்கன்றுகளை இந்த தனியார் நிர்வாகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

மரகன்றுகளை பராமரிக்க இந்த தனியார் நிறுவனத்தினர் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து இதை வளர்த்து வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் பசுமை போர்த்தி காணப்படுகிறது.

இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களுக்கு குளிர்சியாகவும், பயணத்தின் போது இளைப்பார்வதற்கு இந்த மரங்கள் உதவியாகயிருக்கும் என இதை பராமரிப்பவர்கள் நம்புகின்றனர்.

ஒகேனக்கல் திறப்பு ஆனால் உள்ளே செல்ல இதை செய்திருக்க வேண்டும்: அரசு உத்தரவு!
மேலும் இந்த தனியார் அமைப்புகள், “சாலையில் செல்லும் வாகனங்கள் மூலம் ஏற்படும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும் மரங்களை வைத்துள்ளோம்” என்கின்றனர்


இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மரங்களை அடையாளம் தெரியாத நபர் ஆசிட் ஊற்றி ஓட்டைப் போட்டுள்ளனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதே இடத்தில் நிலைத்து உயிர் வாழும் மரங்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்த எப்படி மனம் வந்தது எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், “இங்கு கடை வைத்துள்ளவர்கள் பார்வைக்கு தெரிய வேண்டும் என அதை அழிக்க நினைக்கிறார்கள்” என குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி